சூப்பர் ஹீரோவாக மாறி சிறுவனை மீட்ட முதியவர்

திங்கள், 11 ஜூன் 2018 (10:27 IST)
சீனாவில் 5 வது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை, முதியவர் சூப்பர் ஹீரோ போல் சென்று காப்பாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 5வது மாடியிலிருந்து தவறிவிழுந்தான். அப்போது சிறுவனின் தலை ஜன்னல் இடைவெளியில் சிக்கிக் கொண்டதால் பயத்தில் சிறுவன் தன்னை காப்பாற்றும்படி அலறினான்.
 
இதனைக்கேட்ட அங்கிருந்த முதியவர் சற்றும் யோசிக்காமல், சிறுவனை காப்பாற்ற முற்பட்டார். சமயோஜிதமாக யோசித்து ஸ்பைடர்மேன் போல் மாடிச்சுவர்களில் ஏறிச்சென்று தக்க நேரத்தில் சிறுவனை மீட்டார்.
 
இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது. சிறுவனை காப்பாற்றிய  முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்