அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து மேலும் ஒருவர் விலகல்

புதன், 30 டிசம்பர் 2015 (11:30 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து ஜார்ஜ் படாக்கி விலகியுள்ளார்.


 

 
அமெரிக்க அதிபர் பதவிக்கு 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக இந்திய அமெரிக்கரான பாபி ஜிண்டால், கடந்த ஜூன் மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
 
இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவந்த நியூயார்க் நகர முன்னாள் மேயர் ஜார்ஜ் படாக்கி போட்டியில் இருந்து விலகிகொள்வதாக அறிவித்துள்ளார்.
 
அதிபர் தேர்தலில்போட்டியிட ஆதரவு திரட்டிவந்தவர்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஊடகங்களால் முன்னர் சுட்டிக்காட்டப்பட்ட ஜார்ஜ் படாக்கி முறைப்படி தனது விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமா, இரண்டு முறை பதவி வகித்துவிட்டதால், மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது.
 
எனவே, ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
 
அமெரிக்காவில், 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடத்தபடக்கூடும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளுக்கு கீழே கிளிக் செய்யவும்

முக்கிய நிகழ்வுகள் - 2015

வெப்துனியாவைப் படிக்கவும்