‘மூன் எக்ஸ்பிரஸ் மிஷன்’ என்ற தனியார் நிறுவனம் சந்திரனுக்கு பயணம் செய்ய அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.
1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா, அப்போலோ 11 என்ற விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியது. அதைத்தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பூமியை விட்டு வேறு கிரகங்களுக்கு பயணம் செய்ய அமெரிக்க அரசு அனுமதிக்கவில்லை.
தற்போது ‘மூன் எக்ஸ்பிரஸ் மிஷன்’ என்ற தனியார் நிறுவனம் சந்திரனுக்கு பயணம் செய்ய அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. செவ்வாய்க்கும் செல்ல அந்நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் சந்திரனுக்கு விண்கல பயணம் நடைபெறும் என்று அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி பாப் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.