விழுந்து நொறுங்கிய அல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது

சனி, 26 ஜூலை 2014 (10:18 IST)
116 பேருடன் விழுந்து நொறுங்கிய ஏர் அல்ஜீர்ஸ் விமானம் விழுந்த இடத்திலிருந்து கறுப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆப்ரிக்கா நாடான அல்ஜீரியாவின் பயணிகள் விமானம்,  பர்கினோ பாசோவின் தலைநகரான உகடகுவாவில் இருந்து கடந்த  வியாழக்கிழமை காலை புறப்பட்டது.

அடுத்த 50 ஆவது நிமிடத்தில் மாலி நாட்டின் வான்வெளியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது.

விமானத்தில் 110 பயணிகள் உள்ளிட்ட 116 பேர் இருந்தனர். இந்த விமானம் மாலி நாட்டின் வடபகுதியில் அடர்ந்த  காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இங்கு பிரான்ஸ் ராணுவத்தின் தலைமையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் இருந்து விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்