மது குடிப்பதால் 10 வினாடிகளுக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல்

செவ்வாய், 13 மே 2014 (11:34 IST)
உலகெங்கும் அதிக அளவில் மது குடிப்பதால் 10 வினாடிகளுக்கு ஒரு நபர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

மதுபழக்கம் தொடர்பான உலக சுகாதார மையத்தின் இந்த புதிய அறிக்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிக அளவில் மது குடிதத்தால் 3.3 மில்லியன் மக்கள் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், அதிக மது அருந்துவதால், மது பழக்கத்திற்கு அடிமையாவதுடன் காசநோய், நிமோனியா போன்ற நோய்கள் பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக  அதில் கூறப்பட்டுள்ளது.
 
உலக அளவில் நிகழும் 20 மரணங்களில் ஒரு மரணம் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, மது குடித்து வன்முறையில் ஈடுபடுவது, அத்துமீறல் மற்றும் பல தரப்பட்ட வியாதிகள் ஆகியவற்றால் ஏற்படுவதாக ஐ.நா.வின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இது பத்து வினாடிகளுக்கு ஒரு மரணம் என்ற விகிதத்தில் மாறியுள்ளதாக உலக சுகாதார மையத்தின் மன ஆரோக்கிய துறை தலைவரான சேகர் சக்சேனா கூறியுள்ளார்.
 
இந்த அறிக்கையில், தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பெசிபிக் பகுதியில் மது அருந்துவது கடந்த 5 ஆண்டுகளில் அதிகாமாகிக்கொண்டே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்