அமெரிக்காவை அழித்தொழிக்க வாருங்கள்! – ஜிகாதிகளுக்கு அல்கொய்தா தலைவர் விடுத்த அழைப்பால் பரபரப்பு

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (09:45 IST)
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளை அழிக்க வேண்டுமென அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் தனது ஆதரவாலர்களுக்கு அனுப்பிய வீடியோவை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்காவில் 2001ல் இரட்டை கோபுரத்தின் மீது அல்கொய்தா தாக்குதல் நடத்தியபோதுதான் உலகம் முழுவதற்கும் ஒசாமா பின்லேடன் பெயர் தெரிய வந்தது. அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனால் ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளும் படுமோசமாக பாதிக்கப்பட்டன. அமெரிக்க படைகளின் 10 ஆண்டுகால தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் சுட்டு கொல்லப்பட்டார்.

பிறகு அல்கொய்தா இயக்கத்தை வழிநடத்த அய்மன் அல் ஜாவாஹிரி என்பவர் தலைவரானார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்ட செப்டம்பர் 11 அன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அய்மன் அல் ஜவாஹிரி.

அதில் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசியுள்ள அவர் ”மக்கள் சாகிறார்களே என்று யோசிக்காதீர்கள். கொண்ட கொள்கைக்காக நாம் எதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். அமெரிக்க ராணுவம் உலகம் முழுக்கவே இருக்கிறது. உங்களின் நாடுகள் அமெரிக்க ராணுவத்தால் சிதறடிக்கப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.

பயங்கரவாத இயக்கங்களை தொடர்ந்து கண்காணிக்கும் எஸ்.ஐ.டி.இ என்னும் அமைப்பு இந்த வீடியோவை கண்டுபிடித்துள்ளது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் அவற்றின் ஆதரவு நாடுகள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்