ட்ரம்புக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு: 40 சதவீதம் உயர்வு

வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:36 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் 35 சதவீதமாக இருந்தது தற்போது 40 சதவீதமாக அதிகரித்து உள்ளது.


 


அமெரிக்காவின் 45வது அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் 2 வாரங்களில் கடுமையான சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இதனால் பலரும் அதிருப்தியில் உள்ளனர். டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பொதே அவருக்கு எதிராக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது அவர் அதிபரான பின்னும் அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் ட்ரம்ப், இஸ்லாமிய நாட்டினருக்கு எதிராக அறிவித்த சட்டத்திட்டங்களுக்கு நாடு முழுவதும் அதிக அளவிலான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்காவின் கருத்து கணிப்பு படி நாளுக்கு நாள் ட்ரம்பிற்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் 35 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது 40 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்