’விசா’ வாங்க 64 வயது மூதாட்டிய திருமணம் செய்துகொண்ட வாலிபர்

வெள்ளி, 26 ஜூன் 2015 (19:21 IST)
இங்கிலாந்து செல்வதற்காக அந்நாட்டு மூதாட்டியை திருமணம் செய்த வாலிபர், இரண்டு வாரங்களிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றதாக புகார் அளித்துள்ளார்.
 
இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர் நகரில் பாட்ரிகா ஹான்காக்ஸ் என்ற 64 வயது மூதாட்டி ஒருவர் 25 வருடங்களுக்கு முன்னரே தனது கணவரை இழந்ததால், தனது 3 மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.
 

 
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவை சேர்ந்த மான்தர் மென்ஷி என்ற 26 வயது வாலிபரை மூதாட்டி இணையத்தில் சந்தித்துள்ளார். இருவரும் வாரம் 5 முறை அவர்கள் இணையத்தளம் மூலமாக பேசி வந்துள்ளனர்.
 
இருவருக்கும் இடையே பழக்கம் மிக நெருக்கமானதையடுத்து, தன்னை நேரில் சந்திக்க வர முடியுமா’ என அந்த வாலிபர் கேட்டுள்ளார். மூதாட்ட அந்த வாலிபரிடம் கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் கொரூரமான நோய் தாக்கியதில் அவர் சக்கர நாற்காலியில் மட்டுமே அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
 

 
அதனை இத்தனை நாள் சொல்லாததால் மூதாட்டிக்கு வாலிபர் என்ன நினைப்பாரோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் உண்மையை மறைக்காமல் அந்த வாலிபரிடம் சொல்ல, அவர் ‘நீங்கள் ஒரு அழகு தேவதை. உங்கள் உடல் குறைபாடு தனக்கு எந்த விதத்திலும் பிரச்சனை அளிக்காது’ மூதாட்டியிடம் கூறியுள்ளார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த அந்த வாலிபரை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து துனிசியாவிற்கு சென்றுள்ளார். துனிசியாவில் இருவரும் சந்திததும் வாலிபர் மூதாட்டியை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
 
மேலும், அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே பல முறை உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், வாலிபரின் பெற்றோர்கள் ஆதரவுடன் திருமணமும் நடைபெற்றது. திருமணத்திற்கான சுமார் 4,700 பவுண்டுகள் உட்பட அனைத்து செலவுகளையும் மூதாட்டியே ஏற்றுள்ளார்.
 

 
சில தினங்களுக்கு பிறகு, தான் இங்கிலாந்திற்கு வர விருப்பம் இருப்பதாகவும், அதனால், அங்கு சென்று தனக்கு விசா எடுப்பதற்கான வேலைகளை செய்யும்மாறு கூறி அந்த மூதாட்டியை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
 
இங்கிலாந்திற்கு திரும்பிய அந்த மூதாட்டி, தன்னிடம் இருந்த பணத்தை செலவளித்து கடும் சிரமத்திற்கு இடையே 8 மாதங்களில் தனது புதிய கணவருக்கு விசா எடுத்துள்ளார். இங்கிலாந்திற்கு வந்த அந்த வாலிபர் இரண்டு வாரங்கள் மட்டுமே மூதாட்டியுடன் தங்கி இருந்துள்ளார்.
 
பின்னர், வெளியே சென்றுவருவதாக கூறி சென்ற அந்த நபர் திரும்பி வரவே இல்லை. 2012ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து தற்போது அந்த மூதாட்டி, விசா வாங்குவதற்காக தனது உணர்வுகளுடன் விளையாடியதாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்