இந்த தாக்குதலுக்கு பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் அமைப்பு அல்லது தாலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகப்பட்ட நிலையில், இதனை பாகிஸ்தான் செய்திருக்ககூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத குழுவும், அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யும் காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து பாகிஸ்தான் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.