ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விமானம்: பயணிகளின் நிலை என்ன?? அதிர்ச்சி வீடியோ!

சனி, 6 ஜனவரி 2018 (14:51 IST)
கனடாவில் பயணிகள் விமானம் ஒன்ரோடு ஒன்று மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்ப்ட்டுள்ளது. மேலும், அது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் உள்ள டோரண்டோ நகரில் உள்ள விமான நிலையத்தில், இரு விமானங்கள் மோதிக்கொண்டன. விபத்துக்குள்ளான இரு விமான நிறுவனங்கள் வெஸ்ட் ஜெட் மற்றும் சன்விங் நிறுவனங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த மோதலினால், விமானத்தின் வால் பகுதி தீ பற்றி எரிந்தது. விபத்து நேர்ந்த போது சன்விங் விமானத்தில் யாரும் இல்லை. ஆனால் வெஸ்ட் ஜெட் விமானத்தில் 168 பயணிகள் இருந்துள்ளனர். விரைந்து செயல்பட்டு பயணிகள் அனைவரும் எமர்ஜென்சி வழியாக வெளியேற்றப்பட்டனர். 
 
இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், விபத்தின் போது பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டதா? என்பதை விமான நிறுவனம் தெரிவிக்க மறுத்துவிட்டது. விபத்தின் வீடியோ....

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்