இங்கிலாந்து ராணியிடம் கை குலுக்கிய கமல்ஹாசன்..

புதன், 1 மார்ச் 2017 (16:59 IST)
20 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த இங்கிலாந்து ராணி எலிசபெத், நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதற்காக மருதநாயகம் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.


 

 
ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, சில காரணங்களுக்காக அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017ம் ஆண்டு கலாச்சார வரவேற்பு விழா, இங்கிலாந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது.
 
இந்த விழாவில் இந்தியா சார்பில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நடிகர்கள் கமல்ஹாசன், சுரேஷ் கோபி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 20 வருடங்களுக்கு பின் ராணி எலிசபெத்தை சந்தித்த கமல்ஹாசன், அவரிடம் கை குலுக்கி பேசினார். 


 

 
அதன்பின் அங்கு பேசிய கமல்ஹாசன், இதற்கு எனது பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கில மொழி திகழ்கிறது. 70வது சுதந்திர தினவிழாவை கொண்டாட தயாராக இருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையேயான உறவை ஏற்படுத்திக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்களை நினைவு கூறுகிறேன்” எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்