குடியேற்றக்காரர்களை காப்பாற்ற மேலும் நடவடிக்கை தேவை

புதன், 15 ஏப்ரல் 2015 (15:17 IST)
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐநா கோரியுள்ளது.
 



























படகு ஒன்று கடலில் மூழ்கியதில், சுமார் 400 குடியேற்றக்காரர்கள் திங்களன்று கடலில் மூழ்கி இறந்ததாக அஞ்சப்படும் நிலையில் இந்தக் கோரிக்கை வந்துள்ளது.
 
குடியேற்றக்காரர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று ஐநா அகதிகளுக்கான அமைப்பின் பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
 
அப்படியான மீட்பு முயற்சிகள் குடியேற்றக்காரர்களை ஊக்குவிக்கும் என்று சிலர் வாதிடும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் தனது மீட்பு நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டது.
 
லிபியாவில் இருக்கும் ஒரு குடியேற்றக்காரர்களுக்கான தடுப்பு நிலையம் ஒன்றுக்கு சென்ற பிபிசியின் செய்தியாளர் ஒருவர், அங்கு ஒரு மலசல கூடத்தை 500 பேர் பகிர்ந்துகொள்ளும் நிலையை கண்டுள்ளார்.
 
ஆனால், தமது வாழ்க்கை மிகுந்த ஆபத்தில் இருப்பதனாலேயே, தாம் ஐரோப்பாவுக்கான அபாயகரமான பயணத்தை தேர்ந்தெடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்