தேனிலவிற்கு சென்ற பெண்ணிற்கு நடந்த மோசமான அனுபவம்

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (16:33 IST)
இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபைசா ஷாஹீன் என்ற பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதை அடுத்து, ஷாஹீன் தனது தேனிலவிற்காக துருக்கி செல்லத் திட்டமிட்டார். 


 
 
அதை தொடர்ந்து, விமானம் மூலம் அவர் துருக்கிக்குப் புறப்பட்டார். தேனிலவு முடிந்து அவர் இங்கிலாந்து திரும்பிய போது, விமானத்தில், சிரிய நாட்டு இலக்கிய புத்தகத்தை படித்து வந்தார். இதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அவரை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க அழைத்து சென்றனர்.
 
சிரிய நாடு தொடர்பான புத்தகத்தைப் படித்ததால் அவர் தீவரவாதியாக இருக்கலாமோ என்ற அச்சம் ஏற்பட்டதால், பாதுகாப்புப் படையினர் ஷாஹீன் நீண்ட நேர விசாரணைக்குப் பின்னரே விடுவித்தனர். இதுகுறித்து ஷாஹீன் கூறுகையில், ”தேனிலவு எனக்கு மோசமான அனுபவத்தை கொடுத்துள்ளது, புத்தகம் படித்தால் கூட தப்பா” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்