ஏமனில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல்: 14 ராணுவ வீரர்கள் பலி

வியாழன், 18 பிப்ரவரி 2016 (00:36 IST)
ஏமனில் ஐ.எஸ்.தீவிரவாதிகள்  தாக்குதலில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் 14 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
 

 
ஏமன் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதி ஆட்சிக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சவுதி தலைமையிலான கூட்டு படை கிளர்ச்சியாளர்கள் மீது விமான தாக்குதல் நடத்தி வருகிறது.
 
இந்நிலையில், ஏமனில் உள்ள ராஸ் அப்பாஸ் முகாமில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது அங்கு ராணுவ சீருடையில் வந்த ஒரு நபர், தனது உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில், 14 பேர் அந்த இடத்திலயே உடல் சிதறி பலியானார்கள். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதி அமைப்பு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்