இந்நிலையில் அந்த பெண்ணின் உடலில் மாற்றத்தைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. உடனடியாக அந்த பெண் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்தார். இது அந்த பெண்ணின் உறவினர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.