ரெயில்வே ஸ்டேஷனில் சான்விச் சாப்பிட்ட நபர் கைது..

Arun Prasath

செவ்வாய், 12 நவம்பர் 2019 (19:05 IST)
அமெரிக்காவில் ரெயில்வே ஷ்டேஷனில் சான்விச் சாப்பிட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஸ்டீவ் ஃபாஸ்டர் என்பவர், காண்ட்ரா கோஸ்டா மையத்தின் “Bay Area Transmit” பிளாட்ஃபாரத்தில் காலை 8 மணியளவில் பணிக்கு செல்வதற்காக ரயிலுக்கு காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் சான்விச் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

இதனை பார்த்த போலீஸ் அதிகாரி, ஃபாஸ்டர் சான்விச் சாப்பிடுவதை தடுத்து நிறுத்தினார். மேலும் ரயில் நிலையத்தில் உணவு பொருட்கள் சாப்பிடுவது கலிஃபோர்னியா விதிமுறைகளுக்கு எதிரானது என கூறியுள்ளார்.

ரயில் நிலையத்தில் அனைவரையும் விட்டுவிட்டு தன்னை மட்டும் குற்றம் சாட்டுவதாக ஃபாஸ்டர் கூறினார். ஆனால் போலீஸ் அதிகாரியோ அவரை காவல் நிலையம் கொண்டு செல்வதற்காக பிடித்து இழுத்தார்.

அதன் பின்பு 3 காவல் அதிகாரிகள் ஃபாஸ்டரை ரயில் நிலையத்தில் தனியறையில் அடைத்தனர். ”தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவு உண்பது சட்ட விரோதம் எனவும், ஃபாஸ்டரை கைது செய்யவில்லை, அவருக்கு சம்மன் தான் அனுப்பியுள்ளோம்” என போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் அவருக்கு கைவிலங்கிட்டனர் என கூறப்படுகிறது.

ஃபாஸ்டரை கைது செய்த போது, அங்கிருந்த பொதுமக்கள் “ரயில்வே ஃபிளாட்பாரத்தில் உணவு கடைகள் ஏன் உள்ளது? இங்கு உணவு பொருட்களை உண்ணக்கூடாது என்ற அறிவிப்புகள் எதுவும் இல்லையே?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்