17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சிறுமி: ஒரு தாய் மகிழ்ச்சி!, இன்னொரு தாய் சோகம்!

வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (07:23 IST)

தென் ஆப்பிரிக்காவில் குரூட் செக்குர் மருத்துவமனையில் கடந்த 1997-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
 


 



அக்குழந்தையின் தாய் மயக்கமாக இருந்த போது ஒரு பெண் அந்த பச்சிளங் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இதை அடுத்து கடத்தப்பட்ட குழந்தை வளர்ந்து பெரியவளாகி 17 வயது நிரம்பிய நிலையில் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அதே பள்ளியில் படித்த ஒரு சிறுமி இவளது முக தோற்றத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், இவர்களுடன் படித்த தோழிகள், ’இருவருக்கும் ஒரே முக தோற்றம்’ இருப்பதாக இவர்களிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த மாணவி கூறியுள்ளார். இதை கேட்ட பெற்றோர், சந்தேகித்து, அப்பெண்ணை பற்றி விசாரித்துள்ளனர். அப்பெண் தங்கள் மகளாக இருக்கலாம் என்று நினைத்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
 

’அவள் தனது மகள் தான்’ என மற்றொரு தாய், கூறியுள்ளார். அந்த தாயின் பதில் திருப்தி அளிக்காததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவள் கடத்தப்பட்ட குழந்தை என தெரியவந்தது. பின்னர், அந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதை அடுத்து, குழந்தையை கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்