டேட்டிங் ஆப்பால் இளம்பெணுக்கு நேர்ந்த பரிதாபம்

புதன், 5 டிசம்பர் 2018 (14:26 IST)
இந்தோனேஷியாவில் பிரபல டேட்டிங் ஆப் மூலம் இளம்பெண்ணிற்கு அறிமுகமாக வாலிபர் அந்த பெண்ணின் காரை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம்தலைமுறையினர் ஒருவருக்கொருவர் நட்புடன் பழக செல்போனில் ஏகப்பட்ட செயலிகள் வந்துவிட்டன. இந்த ஆப் மூலம் பெண்கள், ஆண்கள் தங்களுக்கு பிடித்தவருடன் பேசி பழக முடியும். செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு இவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.
 
இந்தோனேஷியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரபல டேட்டிங் மூலம் ஒரு நண்பர் கிடைத்துள்ளார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு நேரில் சந்தித்து பேசியுள்ளனர். நாளுக்கு நாள் இவர்களுக்குள் நட்பு அதிகமாகியது.
 
இந்நிலையில் இவர்கள் இருவரும் பர்ச்சேசிற்காக ஷாப்பிங் மாலுக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணின் காரை திருடி சென்றுவிட்டார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
பெண்கள் சமூக வலைதளங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எவ்வளவு தான் கூறினாலும் இவர்கள் மாதிரியான ஆட்கள் ஏமாந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்