98% தந்தங்களின்றி பிறக்கும் ஆப்ரிக்க யானைகள்: காரணம் என்ன?

செவ்வாய், 29 நவம்பர் 2016 (11:05 IST)
ஆசிய யானைகளை விட உருவத்தில் சற்று பெரியதாக இருக்கும் ஆப்ரிக்க யானைகளுக்கு ஆண், பெண் என இரண்டிற்கும் தந்தங்கள் இருக்கும்.


 
 
ஆப்ரிக்க யானைகளின் சிறப்பு அதன் தந்தங்கள். பெரிய தந்தங்களோடு இருக்கும் யானைகளை பார்க்கவே பிரமாண்டமாய் இருக்கும்.
 
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி ஆப்ரிக்க யானைகள் தந்தங்கள் இல்லாமல் பிறப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்படுவதால் தான்.
 
இவ்வாறு தொடர்ந்து யானைகள் வேட்டையாடப்படுவதால் அவற்றின் மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மரபணுமாற்றத்தால், கிட்டத்தட்ட 98 சதவீத பெண் யானைகள் தந்தங்கள் இல்லாமல் பிறப்பாதாக தெரிவிக்கபட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்