ஏமனில் தற்கொலைப்படை தாக்குதல்: ஆளுநர் உயிர் தப்பியது

வெள்ளி, 29 ஜனவரி 2016 (10:41 IST)
ஏமன் அதிபர் மாளிகை அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


 
 
ஏமன் ஆளுநராக இரந்த ஜாபர் சாட் கடந்த ஆண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். பின்னர், கடந்த டிசம்பர் மாதம் அய்தரஸ் அல்-ஜூபாய்தி ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும். இதில் அவர் தப்பித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது
 
இதனைத்தொடர்ந்து, நேற்று ஏமன் அதிபர் மாளிகை அருகில் திடீரென தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த தாக்குதலும் ஆளுநர் ஜூபாய்தியை குறி வைத்து, அவரது பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஆனால், அந்த இடத்தில் அல்-ஜூபாய்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்