உலகை மிரட்டும் டெங்கு: பிரேசிலில் 700 பேர் பலி

புதன், 7 அக்டோபர் 2015 (12:48 IST)
டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது. ஒரு வகையான கொசு மூலம் இது பரவுகிறது. வெப்ப மண்டல மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.

இந்த நிலையில் மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் பிரேசிலில் மிகக் கடுமையாக பரவி வருகிறது.
இங்கு டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 700 பேர் பலியாகி உள்ளனர்

இந்தியாவிலும் தற்போது டெங்கு பரவி வருகிறது. தமிழகத்தில் கரூரில் இரு குழந்தைகள் டெங்குவினால் உயிரிழந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்