பூமிக்கு அருகில் உள்ள 2024 JV33 என்ற சிறுகோள் குறித்து நாசா அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தச் சிறுகோள் ஆகஸ்ட் 19ஆம் தேதி பூமியை நெருக்கமாகக் கடந்து செல்லக்கூடும் என்று கூறியுள்ளது. 2024 JV33 சிறுகோள், சுமார் 620 அடி விட்டம் கொண்ட கட்டிடத்தின் அளவு இருக்கிறது. தோராயமாக 2,850,000 மைல்கள் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த சிறுகோள் அப்போலோ குழுவின் ஒரு பகுதியாகும். இது பூமியின் சுற்றுப்பாதையை கடப்பதற்கான வாய்ப்பு உள்ள சிறுகோள்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் மணிக்கு 24,779 மைல் வேகத்தில் பயணிக்கும் இந்த சிறுகோள் பூமிக்கு நெருக்கமாக வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.