ஆனால், கடந்த ரம்ஜான் பண்டிகையன்று அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் கரீம் என்ற மதகுருவோ.., ‘நான் அந்த பெண்ணை கடத்தி வரவில்லை. எங்களுக்குள் நிச்சயதார்த்தம் நடந்தது. இவளை எங்கள் அன்பளிப்பாக உங்களிடம் ஒப்படைக்கிறோம். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் அவளை அழைத்து செல்லலாம்’ என அவளது பெற்றோர் கூறியதால் நான் எனது ஊருக்கு அழைத்து வந்தேன்’ என்று கூறியுள்ளார்.