விண்வெளியில் 6 நிமிடங்கள் பயணிக்க ஒரு லட்சம் டாலர்கள்

செவ்வாய், 17 ஜூன் 2014 (16:45 IST)
விண்வெளியில் ஆறு நிமிடங்கள் சுற்றி வருவதற்கு ஒரு லட்சம் டாலர்கள் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
 
இந்த கட்டணத்தைச் செலுத்தி சுமார் முன்னூற்றுக்கும் மேற்பட்ட சீனர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
 
ஸ்பேஸ் எக்ஸ்பெடிஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இதுவரை 305 சீனர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். சீன இணையதள விற்பனை மையமான டாவோபாவோ மூலமாக இந்த நிறுவனம் விற்பனையைத் தொடங்கினர். விண்கலத்தில் 2 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். அரிய காட்சிகளுடன் ஆறு நிமிடங்கள் இவ்வாறு விண்னில் பறக்கலாம்.
 
இதற்கு உரிய பயணச் சீட்டுகள் சீனாவின் நாணயமான 5 லட்சத்து 99 ஆயிரத்து 999 யுவான்களுக்கு விற்கப்பட்டது. பயணத் தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பயணிகள் 125 கிலோ எடைக்கு மேல் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்