உலக போர் விபரீதம்: ஜெர்மெனியில் 54,000 மக்கள் வெளியேற்றம்!

திங்கள், 26 டிசம்பர் 2016 (11:13 IST)
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி மீது வீசப்பட்ட குண்டை செயலிழக்க செய்ய ஆக்ஸ்பர்க் நகர மக்கள் சுமார் 54,000 பேர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியேற்றப்பட்டனர்.


 
 
இரண்டாம் உலக போரின் போது ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் ரஷ்யா ஆகிய நாடுகள் நேச அணியிலும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அச்சு அணியிலும் இருந்தன.
 
உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை அமெரிக்கா வீசியது. இதன் விளைவாகச் ஜப்பான் சரணடைந்து, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
 
இந்நிலையில், ஜெர்மனி நகரான ஆக்ஸ்பர்க்கில் நடைபெற்ற கட்டுமான பனியின் போது, இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 1.8 டன் எடை கொண்ட அந்த குண்டு பிரிட்டிஷ் படைகளால் வீசப்பட்டவை என்றும் கூறப்பட்டது.
 
தொடர்ந்து, இந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய முடிவெடுத்த ஜெர்மனி, குண்டை செயலழிக்க செய்யும் பொருட்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று அப்பகுதியில் இருந்த சுமார் 54,000 பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. பின்னர் வெற்றிகரமாக குண்டு செயலிழக்கப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்