பெட்ரோல், டீசல் , கியாஸ் விலை 50% உயர்வு...மக்கள் முற்றுகை போராட்டம்

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (22:13 IST)
வங்காள தேச அரசு கடந்த 5 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய நிலையில்,  கியாஸ் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வங்க தேசத்தில் பிரதமராக சேக் ஹசினா ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில் 1971 ஆம் ஆண்டு இந்த நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இப்போதுவரை இல்லாத அளவு ஆளும் அரசசு எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது..

பெற்றறோல் விலை 51.7 அதிகரித்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் 50% அதிகரித்துள்ளது.

இதையடுத்து கியாஸ் விலையும் கூடியுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசியப்  பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் இலங்கையைப் போல் மக்கள் பெற்றோல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விலை உயர்வு கடந்த 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்