இரும்பு பொருட்களை ஈர்க்கும் உடம்பு: காந்த சிறுவன் (வீடியோ)

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (16:14 IST)
ஐரோப்பாவின் போஸ்னியாவை சேர்ந்த 5 வயது சிறுவன் காந்த மனிதன் என்று பெயர் பெற்றுள்ளான். அவனது உடம்பில் உலோக பொருட்கள் அனைத்து ஒட்டிக்கொள்கிறது. 


 

 
ஐரோப்பாவின் போஸ்னியாவை சேர்ந்த எர்மான் டெலிக்(5) என்ற சிறுவனது உடல் காந்தக தன்மை உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதோடு இந்த சிறுவனைப்பற்றி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை உறுதி செய்ய அத்தொலைக்காட்சி நிருபர் ஒருவர் சிறுவனின் உடம்பில் ஸ்பூன்கள் மற்றும் 13 நாணயங்களை அவருடைய மார்பில் வைக்கிறார். 
 
அவைகள் அனைத்தும் அந்த சிறுவனின் மார்பில் ஒட்டிக் கொண்டது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவரை அனுகியுள்ளனர். ஆனால் மருத்துவர்களே இது வினோதமான செயல் என்ரு குழப்பத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
மேலும் கண்ணாடி, பீங்கான், மரம் அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றையும் சிறுவனது உடல் ஈர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
 
நன்றி: DailyMail

வெப்துனியாவைப் படிக்கவும்