சீனாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட கோவிட் 19 வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. அங்கே இதுவரை 5,33,259 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 20,597 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் வாழும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கு வசித்து வந்த இந்தியர்கள் 40 பேருக்கு மேல் இதுவரை பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகின் சூப்பர் பவர் நாடு என் மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா கொரோனா தொற்றை தடுக்க முடியாமல் தள்ளாடி வருகிறது. இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தையும் சீனா ரேபிட் டெஸ்ட் கிட்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி உதவி செய்து வருகின்றன.