இந்த நிலையில், ராணுவ ஆட்சியில் இருந்து மீண்டும் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப வேண்டுமென்ற முன்மொழிவின்படி, ராணுவத்துடன், துணை ராணுவப்படையை இணைப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளதால், தினமும் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்றிரவு 10:30 மணியளவில், சூடான் நாட்டிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 10 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சூடானில் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள தமிழகர்களை தாயகம் மீட்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 275 பேரை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு மீட்டு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.