உச்ச நீதிமன்றம் அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (20:56 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உச்ச நீதிமன்றம் அருகே குண்டு வெடித்ததில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மாலை 4 மணி அளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

38 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டு வெடித்த சம்பவ இடத்தை பாதுகாப்பு பய்டையினர் சுற்றி வளைத்தனர். இந்த தாக்குதல் நீதிமன்ற ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. பணி முடிந்து வீடு திரும்பும் மாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்