6 வயது பெண் குழந்தையின் பிறப்புறுப்பை சிதைத்த இந்திய டாக்டர் அமெரிக்காவில் கைது

சனி, 22 ஏப்ரல் 2017 (04:53 IST)
அமெரிக்காவில்  18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பை சிதைப்பது கடுமையான குற்றம் என கடந்த 1996ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு அது கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தை செய்தவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்ற நிலையில் இந்திய பெண் டாக்டர் ஒருவர் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.



 


அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி பெண் மருத்துவரான 44 வயது ஜுமானா நகர்வாலா என்பவர் அங்குள்ள மிச்சிகன் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் சிறப்பு பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அவர் 6 முதல் 8 வயதான 2 பெண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பை சிதைத்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு உதவி செய்ததாக மேலும் இருஅர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்கள் வலுவாக இருப்பதால் கடுமையான தண்டனை கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்