வங்கதேசத்தில் அட்டூழியம்: 15 இந்து கோவில்கள் தகர்ப்பு

செவ்வாய், 1 நவம்பர் 2016 (11:08 IST)
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசம் மத சார்பற்ற நாடாக உள்ளது. இங்கு இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.


 
 
இந்நிலையில் பிரம்மன் பார்கியா மாவட்டம் நசீர் நகரில் நேற்று 100 இந்துக்களின் வீடுகளில் புகுந்து ஒரு கும்பல் கொள்ளையடித்தது. மேலும், ஹபிக்ஞச், மதாபூர் ஆகிய இடங்களில் 2 இந்து கோவில்களை இடித்தனர். அங்கு தங்கியிருந்த பூசாரிகள் தாக்கப்பட்டனர். 
 
இத்தகவலை இந்து இளைஞர் ராஸ்ராஜ்தாஸ் ‘பேஸ்புக்‘ இணைய தளத்தில் வெளியிட்டார். இதை தொடர்ந்து அவர் மத அவமதிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மத உணர்வை தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையே, வங்காள தேசத்தில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட கோவில்கள் இடித்து அழிக்கப்பட்டதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சமூக விரோதிகள் மீது வங்காள தேச அரசும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருந்தும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்