இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 13 பேர் அமெரிக்காவில் கைது

வெள்ளி, 8 ஜனவரி 2016 (17:15 IST)
அமெரிக்காவில் சியாட்டல் நகரில் தென்கொரியாவில் இருந்து போலி விசாக்கள் மூலம் அழைத்து வந்த இளம் தென்கொரிய அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
அமெரிக்காவில் தீ லிக் என்ற வலைத்தளம் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பல் தென்கொரியாவை சேர்ந்த இளம் பெண்களை போலி விசா மூலம் அழைத்து வந்து அமெரிக்காவின் பல மாகணங்களில் பாலியல் தொழிலில் பயன்படுத்தினர்.
 
உளத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அந்த வலை தளத்தை சைபர் கிரைம் பிரிவு ரகசியமாக கவனித்து அதன் தலைமையகமான சியாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அந்த கும்பலை சேர்ந்த 13 பேரை கைது செய்து அவர்களுடன் இருந்த 12 தென்கொரிய இளம்பெண்களையும் மீட்டனர்.
 
இந்த கும்பல் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பலவற்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
 
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களில் பலர் விசா காலாவதியான பிறகும் முறைகேடாக அமெரிக்காவில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்