11 பில்லியன் டாலர்கள் முதலீடு, 1,00,000 புதிய வேலைவாய்ப்பு : அமெரிக்காவை கலக்கும் இந்தியா

திங்கள், 8 ஜூலை 2013 (11:23 IST)
FILE
அமெரிக்காவில் இந்தியா 11 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளதும், அங்கு 1,00,000 புதிய வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளதும் தெரியவதுள்ளது.

அமெரிக்காவில் இந்திய முதலீடு குறித்து, அமெரிக்க - இந்திய வர்த்தக சபை ஆய்வு ஒன்றை நடத்தியது. ‘அமெரிக்காவில் முதலீடு, அமெரிக்காவில் வேலைகளை உருவாக்க இந்தியா எப்படி உதவுகிறது‘ ('Investing in America, How India Helps Create American Jobs' )என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் இந்தியாவுடனான பரஸ்பர மற்றும் வர்த்தக உறவுகள் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் அடையும் பயன்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா, அமெரிக்காவில் 11 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளதாகவும், இதனால் அமெரிக்காவில் 1 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் துணை செயலாளர் வில்லியம் பர்ன்ஸ், 2000 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவில் இந்திய முதலீடு 200 மில்லியனிலிருந்து 5 பில்லியனாக உயர்ந்ததையும், அப்போது இந்தியாவால் அமெரிக்காவில் 50,000 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டதையும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்