.'மெர்சியின் நன்றி அறிவிப்பு நாள்' : நியூயார்க் விழாக்கோலம்

வெள்ளி, 27 நவம்பர் 2009 (20:15 IST)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் ' மெர்சியின் நன்றியறிவிப்பு நாள்' மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மேற்குலகுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்நாள் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இதனையொட்டி 83 ஆவது ஆண்டு நிறைவான நேற்று நியூயார்க் நகரம் முழுவதிலும் ஏராளமான கேளிக்கை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன.மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடி கொண்டாடினர்.

இக்கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆரம்ப விழாவாக 1924 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

காலப்போக்கில் அதுவே ' மெர்சியின் நன்றியறிவிப்பு நாள்' என்று பெயரிடப்பட்டு, ஒரு கோலாகலத் திருவிழாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்