'அல் - காய்தாவை வீழ்த்துவது அமெரிக்க பாதுகாப்புக்கு முக்கியமானது'

வியாழன், 1 அக்டோபர் 2009 (13:27 IST)
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை நடத்தி வரும் போர் இன்னும் அவசியமானதாக உள்ளது என்றும், அல் - காய்தா மற்றும் தாலிபான்களை வீழ்த்துவது அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்றும் அதிபர் பராக் ஒபாமா கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ்,அல் - காய்தா மற்றும் அதன் கூட்டாளிகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கங்களை முற்றிலும் அழிப்பது அவசியமாக உள்ளது என்றார்.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்காக பாதுகாப்பான முகாம்களை பயங்கரவாத இயக்கங்கள் அமைப்பதை அமெரிக்கா தடுக்க வேண்டியதுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் இன்னும் தாலிபான்களுக்கு எதிராக போர் நடத்துவது அவசியம்தான் என்று அதிபர் ஒபாமா இன்னும் கருதுகிறாரா என்று கேட்டபோது, அது குறித்த கேள்வியே எழவில்லை என்றார் ராபர்ட்.

வெப்துனியாவைப் படிக்கவும்