'ஹேக்கர்' இணையதளம் மூடப்பட்டது: சீனா நடவடிக்கை

திங்கள், 8 பிப்ரவரி 2010 (18:28 IST)
சீனாவின் மிகப்பெரிய 'ஹேக்கர்' பயிற்சி இணைய தளத்தை அந்நாட்டு காவல் துறையினர் மூடியுள்ளதோடு, மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

கணினிகளை ஊடுருவிச் சென்று தகவல்களை திருடும் மற்றும் அழிக்க வைக்கும்'ஹேக்' குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக, சீனா மீது சமீப நாட்களாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம் சாற்றி வருகின்றன.

மேலும் சர்வதேச அளவில் 'சைபர் கிரைம்' எனப்படும் கணினி குற்றச்செயல்களின் மையமாக சீனா உருவெடுத்து வருவதாகவும் குற்றச்சாற்றுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சீன அரசு மேற்கூறிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹூபி மாகாணத்தில் செயல்பட்டு வந்த 'பிளாக் ஹாக் சேப்டி நெட்' என்ற இணையதளத்தை காவல் துறையினர் மூடியுள்ளனர்.அத்துடன் அதனை நடத்தி வந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு கணினிகளில் 'ஹேக்' செய்யு பயிற்சியை அளித்துள்ளனர்.ஆன் லைன் மூலமே இந்த பயிற்சியை அளித்து, உளவு பார்ப்பதற்கான 'ஸ்பை' சாப்ட்வேரையும் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்