ஹெட்லியின் விசா விண்ணப்பம் கைப்பற்றப்பட்டது

சனி, 19 டிசம்பர் 2009 (15:17 IST)
மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாற்றில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ஹெட்லியின் அசல் விசா விண்ணப்பம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தின் ஆவண அறையிலிருந்து மற்ற அனைத்து இணைப்பு ஆவணங்களுடன், ஹெட்லியின் அசல் விசா விண்ணம் இருந்ததாகவும், அதிலிருந்து அதனைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு செல்வதற்காக சமர்ப்பித்த கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியிட்ட அசல் விசா விண்ணப்ப படிவத்துடன், ஹெட்லி சமர்ப்பித்த இதர ஆவணங்களும் நேற்று கைப்பற்றப்பட்டதாக இந்திய துணைத் தூதரக வட்டாரங்கள் மேலும் கூறின.

முன்னதாக ஹெட்லியின் விசா ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக தகவல் வெளியானது குறிபபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்