வெளிநாட்டவரை கொண்டு சிங்கப்பூர் மக்கள் தொகையை உயர்த்த திட்டம்

வியாழன், 2 மே 2013 (13:13 IST)
FILE
சிங்கப்பூரில் மக்கட் தொகையை உயர்த்த அரசு வகுத்துள்ள திட்டத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசை கண்டித்து நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்குபெற்றனர்.
வெளிநாட்டினரைக் கொண்டு சிங்கப்பூரின் மக்கட் தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.

ஒரு நகரத்தை மட்டுமே நாடாகக் கொண்டுள்ள சிங்கப்பூர் ஏற்கெனவே ஜனநெருக்கடி மிகுந்த இடமாக உள்ளது என்று இந்தத் திட்டத்துக்கு எதிரானவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டவர்களாலேயே அங்கு ஊதியங்கள் உயராமல் நிலையாக உள்ளது என்றும், வீட்டின் விலைகள் இரட்டிப்பாகியுள்ளது என்றும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு பிறப்பு வீதம் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கட் தொகையை முப்பது சதவீதம் உயர்த்தி 69 லட்சம் அளவுக்கு கொண்டுவர ஆட்சியில் இருகும் மக்கள் செயல் கட்சி திட்டங்களை முன்வைத்துள்ளது.

சிங்கப்பூரை 1965 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதே கட்சியே ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்