வெப்ப வாயு வெளியேற்றம்: யு.எஸ். அதிகளவு குறைக்க ஜெர்மன் வலியுறுத்தல்

வியாழன், 17 டிசம்பர் 2009 (17:47 IST)
கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உறுதியான உடன்படிக்கை ஏற்பட அமெரிக்கா, தனது கரியமில வாயு வெளியேற்ற அளவை மேலும் குறைப்பதாக உறுதியளிக்க வேண்டும் என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் வலியுறுத்தியுள்ளார்.

கோபன்ஹேகன் மாநாட்டில் கலந்து கொள்ள புறப்படும் முன்னர், ஜெர்மன் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்திய அவர், கோபன்ஹேகன் மாநாடு வெற்றியடைய அதில் கலந்து கொண்டிருக்கும் நூற்றுக்கும் அதிகமான உலக தலைவர்கள், ஒரு புது சக்தியை செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

உலக வளர்ச்சிக்கான ஒரு புதிய பாதையை ஏற்படுத்துவதில் நாம் வெற்றி பெறுவோமா இல்லையா என்பதற்கான முதல் படிக்கட்டாக இந்த கோபன்ஹேகன் மாநாடு அமையும் என்று தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்