வெடிகுண்டு மிரட்டல் : யு.எஸ். விமானம் அவசரமாக தரை இறங்கியது

சனி, 19 செப்டம்பர் 2009 (16:42 IST)
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, 172 பேருடன் சென்ற அமெரிக்க விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்திலிருந்து 168 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகளுடன், பாஸ்டன் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது.

விமானம் மேலே ஏறி பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விமானத்தின் குளியலறையில் ஒரு துண்டு காகிதம் கிடப்பதை விமான சிப்பந்திகள் பார்த்தனர்.

அதனப் படித்து பார்த்தபோது, விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து,இது குறித்து அந்த விமானத்தின் விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் மீண்டும் மியாமி விமான நிலையத்தில் அவசர அவசரமாக திரும்பி தரையிறக்கப்பட்டது.

அங்கு விமானம்பத்திரமாக தரை இறங்கியதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து அந்த விமானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.ஆனால் வெடிகுண்டு கண்டறியப்பட்டதா என்பது பற்றி எதுவும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்