வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை இல்லை : யு.எஸ்.

அணு ஆயுதத்தை கைவிட கோரி வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அணு ஆயுத அச்சுறுத்த்லை ஏற்படுத்தி வரும் வட கொரியாவை, அணு ஆயுதத்தை கைவிட வலியுறுத்தி அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் கூறியிருந்தார்.

இந்நிலையில்,அணு ஆயுதங்களை கைவிடுமாறு வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் எதுவுமில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அணு ஆயுத குறைப்பு தொடர்பாக ஏற்கனவே அறிவித்தபடி வட கொரியாவுடன் ரஷ்யா, சீனா, அமெரிக்கா,ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய 6 நாடுகள் அடங்கிய குழுதான் பேச்சு நடத்துமே தவிர, தங்கள் நாடு தனிப்பட்ட முறையில் நேரடியாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் இயான் கெல்லி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்