மோடிக்கு அமெ‌ரி‌க்க விசா அளிக்க எ‌தி‌ர்‌ப்பு!

புதன், 9 ஜூலை 2008 (16:56 IST)
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரி‌க்கா வருவதற்கான விசா அளிக்க வேண்டாம் என்று அமெரிக்க அரசிற்கான ஆலோசனைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் அவரது ஆட்சியில் ஏராளமாக நடைபெறுவதாக கூறிய அந்த ஆலோசனைக்குழு அவருக்கு விசா அளிக்கக் கூடாது என்ற முடிவை மாற்றக்கூடாது என்று கூறியுள்ளது.

சர்வதேச மதச் சுதந்திர ஆணையம், அமெரிக்க குடியேற்ற மற்றும் குடியுரிமை சட்டத்தின் கீழ் அவர் அமெரிக்கா விசா தகுதியற்றவர் என்ற முடிவை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் கொள்கை மாற்றத்தை வலியுறுத்தும் மாற்றங்கள் எதுவும் இல்லை என்று அரசு ஆலோசனைக் குழுவின் தலைவர் ஃபெலிஸ் டி. காயெர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் நியூஜெர்சியில் நடைபெறும் குஜராத்தி பண்பாட்டு மாநாட்டிற்கு மோடி அழைக்கப்பட்டார். 2005-ஆம் ஆண்டு இதே மாநாட்டிற்காக மோடி அழைக்கப்பட்டிருந்தபோது, 2002 குஜராத் கலவரங்களில் இவரது பங்கை சுட்டிக்காட்டி விசா மறுக்கப்பட்டது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், தனது விண்ணப்பம் திருப்பி அனுப்ப‌ப்பட மா‌ட்டாது என்ற உத்தரவாதம் இல்லாம‌ல் விசாவிற்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என்று மோடி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்