மைக்கேல் ஜாக்சனுக்கு ஒபாமா நேரில் அஞ்சலி

வெள்ளி, 3 ஜூலை 2009 (13:34 IST)
மைக்கேல் ஜாக்சனின் உடலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞசலி செலுத்தினார்.

கடந்த ஜூன் 25 ஆம் தேதியன்று மரணமடைந்த மைக்கேல் ஜாக்சனின் உடல், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் நெவர்லான்ட் பகுதியில் அமைந்திருக்கும் அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , ஜாக்சனின் உடலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேரில் சென்று அஞ்சலி மலர் வளையம் வைத்து செலுத்தினார்.

அவர் தனது அஞ்சலி உரையில், ஜாக்சனின் மறைவு அவரது ரசிகர்களுக்கும், அவரைப்பின்பற்றிய இசைக்கலைஞர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார்.

மிகச் சிறந்த இசைக்கலைஞர்களின் வரலாற்றில் ஜாக்சனின் பெயர் நிச்சயம் இடம் பெறும் என்றும் அதில் கூறியுள்ள ஒபாமா , ஜாக்சனின் இசையைக் கேட்டு தாம் வளர்ந்ததாகவும், தமது " ஐபாட் " இல் இன்னும் ஜாக்சனின் இசை தொகுப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜாக்சன் கடந்த வாரம் மரணமடைந்தவுடனேயே ஒபாமா இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்குப் பதிலாக தனது உதவியாளர் மூலம் ஜாக்சனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் ஒன்றை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்