மெக்சிகோவில் இன்று நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 7 . 0 ஆக பதிவு

வியாழன், 12 ஏப்ரல் 2012 (12:38 IST)
மெக்சிகோ நாட்டில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 . 0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்கரையை மையமாக கொண்டு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின. மக்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து வெளியேறி ஓடினர்.

நிலநடுக்கம் கடுமையாக இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



News Summary: A strong 7.0 magnitude earthquake hit western Mexico, said US Geological survey.

வெப்துனியாவைப் படிக்கவும்