முஷாரப்புக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு

புதன், 1 டிசம்பர் 2010 (18:42 IST)
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இந்தியா வருவதற்கான விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்தியாவில் நடைபெற உள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள வருமாறு, அந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் அழைப்பு அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து முஷாரப் தரப்பில் விசா கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.ஆனால் அவருக்கு விசா வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முஷாரப்புக்கு விசா வழங்க மறுத்ததற்கான காரணம் எதையும் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை என்றபோதிலும், முஷாரப்பின் பயணம் நோக்கம் குறித்து இந்திய அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டதாலேயே விசா மறுக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்