மின்னல் அபாயம்: எண்டேவர் விண்கலத்தை ஏவுவதில் தாமதம்

ஞாயிறு, 12 ஜூலை 2009 (17:17 IST)
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் கடுமையான மின்னல் வெட்டு காணப்படுவதால் எண்டேவர் விண்கலத்தை ஏவும் திட்டத்தை 24 மணி நேரம் தள்ளி வைப்பதாக நாசா அறிவித்துள்ளது.

தனது கடைசி விண்வெளிப் பயணத்திற்காக தயார் செய்யப்பட்டுள்ள எண்டேவர் விண்கலத்தை சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த விண்கலத்தில் 7 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட இருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று புளொரிடா பகுதியில் கடுமையான மின்னல் தாக்குதல் காணப்பட்டது. கேப் கனவெரலில் உள்ள ஏவு தளத்தை 11 முறை மின்னல் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எண்டேவரை விண்ணில் ஏவும் திட்டத்தை 24 மணி நேரத்திற்கு ஒத்திவைப்பதாக நாசா அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்