மனித உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா இடை‌நீ‌க்க‌ம்

புதன், 2 மார்ச் 2011 (11:59 IST)
ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா த‌ற்கா‌லிகாக ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக ‌கிள‌ர்‌ச்‌சி‌யி‌ல் அ‌ந்நா‌ட்டு மக்கள் மீதே ராணுவம் விமானங்கள் மூலம் குண்டு வீசி வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு ஐ.நா.சபையும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள ‌நிலை‌யிலு‌ம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து லிபியா ‌த‌ற்கா‌லிகமாக ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இது தொடர்பான தீர்மானம் வா‌க்கெடுப்புக்கு விடப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்