மத துவேஷ சட்டத்தில் திருத்தம் இல்லை: பாகிஸ்தான் அறிவிப்பு

வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (19:15 IST)
சர்ச்சைக்குரிய மத துவேஷ சட்டத்தில் திருத்தம் செய்யப்போவதில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில், இஸ்லாமிய மதத்தை துவேஷம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் சட்டம் அமலில் உள்ளது.

இச்சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாகவும், எனவே, அச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

ஆனால்,இஸ்லாமிய பழமைவாதிகளோ எந்த திருத்தமும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் அதையும் மீறி மசோதாவில் திருத்தத்தை உருவாக்கிய ஆளுங்கட்சி முன்னாள் பெண் அமைச்சர் ஷெர்ரி ரகுமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில், மத துவேஷ சட்டத்தில் எந்த திருத்தமும் செய்யப்போவதில்லை என்று பிரதமர் கிலானி நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்