பொன்சேகா கைதில் எனக்கு தொடர்பில்லை: ராஜபக்ச

வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (18:45 IST)
பொன்சேகா கைதில் தனக்கும், கோத்தபாயவுக்கும் சம்பந்தமில்லை என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா கைதுசெய்யப்படுவது குறித்து தமக்கு தெரியாது எனவும், இந்தச் சந்தர்ப்பத்தில் தான் ரஷ்யாவில் இருந்ததுடன், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்ததாகவும் அஸ்கிரிய மாநாயக்க தேரரிடம் ராஜபக்ச கூறியுள்ளார்.

தாம் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இராணுவத் தளபதி, இராணுவச் சட்டத்திற்கு ஏற்ப பொன்சேகாவை கைது செய்ததாகவும், அதற்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனவும் மகிந்த கூறியுள்ளார்.

அதே சமயம் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அஸ்கிரிய மாநாயக்க தேரரிடம் கூறியுள்ளார்.

பொன்சேகா கைதுசெய்யப்பட்டது குறித்து அஸ்கிரிய மாநாயக்க தேரர், மகிந்தவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்